மதுரையில் கலைஞர் பிறந்த நாளில் கலைஞர் சிலை முன் திருமணம் செய்துகொண்ட ஜோடிகள்..!

ணிகண்டன் – பிரியா என்ற ஜோடி, கலைஞர் பிறந்த நாளையொட்டி மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் உருவச்சிலை முன்பாக சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.

 

முன்னாள் முதல்வரும்,முன்னாள் திமுக தலைவருமான கருணாநிதி அவர்களின் 99-வது பிறந்த நாள் விழா இன்று அரசு விழாவாக கொண்டாடப்படுகிறது. இந்த நிலையில், தமிழக முதல்வர் மு.க.ஸ்டாப்களின் அவர்கள் கோபாலபுர இல்லத்தில் கலைஞர் கருணாநிதி உருவப்படத்திற்கு மரியாதை செலுத்தினார்.

 

அதனை தொடர்ந்து சென்னை மெரினா கடற்கரையில், கலைஞரின் நினைவிடத்திற்கு மரியாதை செலுத்தினார். அதனை தொடர்ந்து, விருது வழங்கும் விழா, மலர் கண்காட்சி போன்ற சிறப்பு நிகழ்வுகள் நடைபெற்று வருகிறது.

 

இந்த நிலையில், மணிகண்டன் – பிரியா என்ற ஜோடி, கலைஞர் பிறந்த நாளையொட்டி மதுரை சிம்மக்கல் பகுதியில் அமைந்துள்ள கலைஞர் உருவச்சிலை முன்பாக சுயமரியாதை திருமணம் செய்து கொண்டனர்.