தந்தையின் மெழுகுச் சிலை முன்பு மகள் திருமணம்..!

ள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் அருகே தந்தையின் மெழுகு சிலை முன்பு மகள் திருமணம் செய்துகொண்டது நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தகடனத்தல் கிராமத்தை சேர்ந்த செல்வராஜ் என்பவர் உடல் நலக்குறைவு காரணமாக கடந்த ஆண்டு உயிரிழந்தார்.

 

இந்நிலையில் செல்வராஜ் மகள் மகேஸ்வரிக்கு இன்று திருமணம் நடைபெற்றது. தந்தை மீது அதிக பாசம் கொண்ட மகேஸ்வரி 5 லட்சம் ரூபாய் செலவில் செல்வராஜுக்கு மெழுகு சிலை அமைத்து அதன் முன்பாக திருமணம் செய்து கொண்டார். இதைக்கண்ட திருமணத்திற்கு வந்த உறவினர்கள் நெகிழ்ச்சி அடைந்தனர்.