குடிநீர் மோட்டாரை இயக்கிய பெண்ணுக்கு ஏற்பட்ட பரிதாபம்..!
சென்னையில் குடிநீர் மோட்டாரை ஆன் செய்த பொழுது மின்சாரம் தாக்கி பெண் ஒருவர் உயிரிழந்தார். சென்னை மேடவாக்கம் பாரதி முதல் தெருவை சேர்ந்தவர் தேவி. மூன்று மகள்களுடன் வசித்து வந்த தேவி வீட்டின் முன்பு உள்ள குடிநீர் மோட்டாரை ஆன் செய்துள்ளார்.
அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கி அவர் சம்பவ இடத்திலேயே மயங்கி விழுந்தார். அக்கம்பக்கத்தினர் தேவியை மீட்டு குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து பள்ளிக்கரணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





