கொட்டும் நீரில் ஏறி சாகசத்தில் ஈடுபட முயன்ற இளைஞர் படுகாயம்..!
கர்நாடகாவில் பாகுபலி திரைப்பட நாயகன் பிரபாசை போல கொட்டும் நீரில் ஏறி சாகசத்தில் ஈடுபட முயன்ற இளைஞர் கீழே விழுந்து படுகாயமடைந்தார். சிக்பெல்லாபூரில் உள்ள ஸ்ரீ்நிவாசாகர் அணைக்கு சுற்றுலா வந்த இளைஞர் பாகுபலி நாயகனாக தன்னை கருதி தண்ணீர் வழிந்தோடும் அணையின் மீது ஏறியுள்ளார்.
அருகில் இருந்தவர்களின் எச்சரிக்கையையும் பொருட்படுத்தாமல் அணையின் மீது ஏறி அவர் பாதி தூரத்தில் இருந்து வழுக்கி விழுந்து படுகாயமடைந்தார். தற்பொழுது அந்த இளைஞர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் அவர் விழுந்த பரபரப்பு காட்சிகள் வெளியாகியுள்ளன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





