மாணவி சிந்துவின் மருத்துவ செலவை அரசே ஏற்றுள்ளது..!

ரு கால்களிலும் எலும்பு முறிவு ஏற்பட்டு எழுந்து நிற்க முடியாமல் தவிக்கும் மாணவி சிந்துவின் மருத்துவ செலவை அரசே ஏற்ற நிலையில் அவர் சென்னை ஓமந்தூரார் பல்நோக்கு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

 

கோடம்பாக்கத்தை சேர்ந்த வாலிபால் வீராங்கனையான சேர்ந்து கடந்த 2007ஆம் ஆண்டு 13வது மாடியில் இருந்து தவறி விழுந்ததில் கால் எலும்புகள் முறிந்தன. எழுந்து நிற்க முடியாத நிலையிலும் மாணவி சிந்து தன்னம்பிக்கையுடன் பொது தேர்வு எழுதினார்.

 

சிந்துவின் மருத்துவ செலவை அரசே ஏற்கும் என முதலமைச்சர் அறிவித்த நிலையில் மாணவி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பல்வேறு துறைகளை சேர்ந்த மருத்துவர்கள் மாணவிக்கு வழங்க வேண்டிய சிகிச்சைகள் குறித்து பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.