--- --:--:-- --

சார்தாம் யாத்திரை சென்றவர்களில் 39 பேர் உயிரிழப்பு..!

6

த்தரகண்ட் மாநிலத்தில் சார்தாம் யாத்திரை மேற்கொண்டவர்களில் இதுவரை 39 பேர் உயிரிழந்திருப்பதாக அம்மாநில சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. புகழ்பெற்ற கேதார்நாத், பத்ரிநாத், கங்கோத்ரி, யமுனோத்ரி ஆகிய நான்கு கோவில்களும் கோடை காலத்தில் திறக்கப்படுவது வழக்கம்.

 

இந்நிலையில் யாத்திரை தொடங்கிய நாள் முதல் இதுவரை 39 பக்தர்கள் உயிரிழந்திருப்பதாக உத்தரகாண்ட் மாநில சுகாதாரத்துறை இயக்குனர் சைலஜா தெரிவித்துள்ளார்.

 

அவர்கள் அனைவருக்கும் உயர் ரத்த அழுத்தம், மாரடைப்பு மற்றும் மலச்சிக்கல் போன்றவை இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மருத்துவ ரீதியாக பாதிப்பு இருப்பவர்கள் யாத்திரையை மேற்கொள்ள வேண்டாம் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon