கல்லூரி மாணவிகளுக்கு தலா ரூ.1000..!
கல்லூரி மாணகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் வருகிற ஜூலை 15ஆம் நடைமுறைக்கு வரும் என உயர்கல்வித் துறை அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் மு க ஸ்டாலின் அரசு பள்ளியில் படித்த கல்லூரிகளில் உயர்கல்வி படிக்கும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் கல்வி உதவித் தொகையாக வழங்கப்படும் என அறிவித்தார். அதன் பிறகு இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என உயர்கல்வித் துறை அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் காமராஜர் பிறந்த நாளான ஜூலை 15ஆம் தேதி இத்திட்டம் நடைமுறைக்கு வரும் என உயர்கல்வித் துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை அரசு பள்ளியில் படித்து உயர் கல்வி படிக்க கூடிய அனைத்து கல்லூரி மாணவிகளுக்கு உதவித்தொகை கண்டிப்பாக கிடைக்கும்.
மேலும் இந்த திட்டம் மூலம் மூன்று லட்சம் மாணவர்கள் பயன் அடைவார்கள் எனவும் இதற்கான கணக்கீடு பணிகள் நடைபெற்று வருவதாகவும் உயர்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





