--- --:--:-- --

புதிய மேம்பாலத்தை திறந்து வைத்த முதல்வர் ஸ்டாலின்.!

2

சென்னையின் மிக நீளமான பாலமான மேடவாக்கம் மேம்பாலத்தை முதலமைச்சர் மு க ஸ்டாலின் திறந்து வைத்தார். மேடவாக்கம் வழியாக தாம்பரம் சாலையை இணைக்கும் வகையில் ஒரு கிலோ மீட்டருக்கு அமைக்கப்பட்ட பாலம் கடந்த வருடம் இரக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டிற்கு வந்தது.

 

இந்நிலையில் தாம்பரம் சாலையில் இருந்த வேளச்சேரி இணைக்கும் வகையில் மேடவாக்கம் மேம்பாலம் 2 கிலோ மீட்டர் நீளத்தில் கட்டப்பட்டுள்ளது. தாம்பரம் வழித்தடத்தில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக 95 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த மேம்பாலம் கட்டப்பட்டுள்ளது. பாலத்தை திறந்து வைத்த முதலமைச்சர் அதில் காரில் பயணம் செய்தார்.

 

இதன் மூலம் மேடவாக்கம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைவதோடு வாகன ஓட்டிகளின் பயண நேரம் குறையும் என அரசு தெரிவித்திருக்கிறது. மேலும் தாம்பரம் வேளச்சேரி பள்ளிக்கரணை, கிழக்கு கடற்கரை சாலை, தரமணி, அடையாறு உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் மக்களுக்கு இந்த பாலம் பயனுள்ளதாக இருக்கும்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon