--- --:--:-- --

இலங்கையில் ஊரடங்கு ரத்து..!

6

இலங்கையில் நாடு முழுவதும் நான்கு நாட்களாக அமலில் இருந்த முழு ஊரடங்கு இன்று காலை முதல் ரத்து செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் கடந்த 9ஆம் தேதி ஏற்பட்ட வன்முறையில் ஏராளமானோர் காயமடைந்தனர். இரண்டு நாட்களாக நடைபெற்ற வன்முறையில் அரசியல் கட்சி தலைவர்களின் வீடுகள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

 

பேருந்து உள்ளிட்ட வாகனங்களும் சேதப்படுத்தப்பட்டன. இதனால் நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. பாதுகாப்பு பணியில் ராணுவம் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வந்தது. அதே நேரத்தில் இலங்கையில் புதிய பிரதமர் பதவி ஏற்றுள்ள நிலையில் நான்கு நாட்களாக அமலில் இருந்த ஊரடங்கு இன்று காலை முதல் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

 

 

அதன்படி இலங்கையில் இன்று காலை 6 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை எட்டு மணி நேரத்திற்கு ஊரடங்கு ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon