--- --:--:-- --

சரவணா ஸ்டோர்ஸ் மீது சிபிஐ வழக்குப்பதிவு..!

4

வங்கி மோசடி விவகாரத்தில் சரவணா ஸ்டோர்ஸ் நிறுவனம் மற்றும் நிர்வாகிகள் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்துள்ளது. சென்னை தியாகராய நகரில் செயல்படும் சரவணா ஸ்டோர்ஸ் கோல்ட் பேலஸ் பங்குதாரர்கள் மீது இந்தியன் வங்கியின் தலைமை நிர்வாகி, சிபிஐயிடம் புகார் அளித்துள்ளார்.

 

அதில் கடந்த 2017இல் 150 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளதாகவும், மேலும் 90 கோடி ரூபாய் கடன் வாங்கியதாகவும் குறிப்பிட்டுள்ளார். இந்த கடன் தொடர்பான சொத்துக்களை வங்கிக்கு தெரியாமல் மாற்றியதும் இரண்டாவதாக பெறப்பட்ட 90 கோடி ரூபாய் கடன் மூலம் ஷோரூம் வாங்கப்பட்ட கடனை அடைக்க முயற்சி செய்ததாகவும் கூறியுள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon