--- --:--:-- --

பிரேக்குக்குப் பதிலாக ஆக்சிலேட்டரை மிதித்ததால் ஆம்புலன்ஸ் மீது மோதிய ஆம்புலன்ஸ்..!

3

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் முன்பு நின்று கொண்டிருந்த 108 ஆம்புலன்ஸ் மீது எதிரே வந்த மற்றொரு 108 ஆம்புலன்ஸ் மோதிய காட்சிகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளன. கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அரசு மருத்துவமனை வாயில் முன்பு நிறுத்தப்பட்டிருந்த ஆம்புலன்ஸ் வாகனத்தை நிறுத்த இடம் இருக்கிறதா என பார்ப்பதற்காக நிறுத்திவிட்டு ஒருவர் மருத்துவமனைக்கு சென்றுள்ளார்.

 

வேறொரு பகுதியில் இருந்து மருத்துவமனைக்கு வந்த மற்றொரு 108 ஆம்புலன்ஸ் ஓட்டுனர் கவனக்குறைவாக ஆக்சிலேட்டரை அழுத்தியதாக தகவல் வெளியாகி உள்ளது. இதனால் நின்று கொண்டிருந்த ஆம்புலன்ஸ் மீது முன்பக்கம் வந்து மோதிய வேகத்தில் பின்னுக்கு நகர்ந்தது.

 

விபத்தில் யாருக்கும் காயம் இல்லை எனவும் வாகனங்களின் முன்பக்கம் மட்டும் லேசான சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon