தண்ணீர் தொட்டியில் விழுந்த குழந்தை..!
ராஜபாளையம் அருகே இரண்டரை வயது குழந்தை தண்ணீர் தொட்டிக்குள் தவறி விழுந்து உயிரிழந்தது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள காலனியை சேர்ந்த ஜான், கிரிஜா தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
சரியாக மூடப்படாத தண்ணீர் தொட்டி அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தையின் கையில் இருந்த பழம் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துள்ளது. அதனை எடுக்க முயன்ற குழந்தையும் தண்ணீர் தொட்டிக்குள் விழுந்துள்ளது.
குழந்தை காணாமல் போனதால் பெற்றோர்கள் தேடியபோது குழந்தை தண்ணீர் தொட்டியில் இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





