தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்பு..!
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வரும் 30ஆம் தேதி வரை தமிழகத்தின் சில பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் இன்றும், நாளையும் கன்னியாகுமரி திருநெல்வேலி மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் ஈரோடு, சேலம், கரூர், தருமபுரி, நாமக்கல் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வரும் 28, 29 ஆகிய தேதிகளில் கன்னியாகுமரி, திருநெல்வேலி, மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்தில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.






