--- --:--:-- --

அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டுமென முதல்வர் அறிவுரை..!

3

மக்கள் முக கவசம் அணிவதை உறுதி செய்யும் வகையில் ஆட்சியர்கள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதலமைச்சர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியிருக்கிறார்.

 

வட மாநிலங்களில் கொரொனா பரவல் அதிகரித்திருக்கும் நிலையில் தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டிய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து மருத்துவத் துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர்கள் ஆகியோருடன் தமிழக முதலமைச்சர் மு க ஸ்டாலின் ஆலோசனை நடத்துகிறார்.

 

இதில் பேசிய முதலமைச்சர் கொரொனா பரவலைத் தடுக்க அரசு அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும் எனவும் தகுதி உள்ள அனைவருக்கும் தடுப்பு ஊசி செலுத்தப்பட்டதை உறுதி செய்ய வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

 

இந்த ஆலோசனை கூட்டத்தில் மருத்துவத் துறை செயலாளர் ராதாகிருஷ்ணன், இயக்குனர் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றுள்ளனர். நாளை மறுநாள் பிரதமருடன் ஆலோசனை நடத்த இருக்கும் நிலையில் முதலமைச்சர் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனையில் ஈடுபட்டார். எனவே இந்த நிலையில் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என அவர் அறிவுறுத்தி உள்ளார்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon