ஆசிரியரை மிரட்டிய பள்ளி மாணவன் சஸ்பெண்ட்..!
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே பள்ளி ஆசிரியரை மிரட்டிய மாணவர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார். ஆம்பூர் அருகே அரசு பள்ளியில் ரெக்கார்ட் சமர்ப்பிக்காமல் பள்ளி வகுப்பறையிலேயே பாய் போட்டு தூங்கிய மாணவனை தாவரவியல் ஆசிரியர் தட்டிக் கேட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த அந்த மாணவன் ஆசிரியரை தகாத வார்த்தைகளால் திட்டி ஒரு கட்டத்தில் தாக்கப்பட்டுள்ளார். இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வெளியாகி வைரலாகிய நிலையில் பள்ளிக்கு வந்த கோட்டாட்சியர் மட்டும் வட்டாட்சியர் இது குறித்து விசாரித்ததை தொடர்ந்து மாணவர்களை சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





