--- --:--:-- --

லவ் பேர்ட்ஸ் கூண்டுக்குள் புகுந்த நல்ல பாம்பு..!

8

மரக்காணம் அருகே லவ்பேர்ட்ஸ் கூட்டிற்குள் புகுந்த நல்லபாம்பு ஜோடியை கொத்தியதில் இரண்டும் பரிதாபமாக உயிரிழந்துள்ளது. விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ள பங்களா தெரு பகுதியில் வசித்து வருபவர் தனது வீட்டில் லவ்பேர்ட்ஸ் வளர்த்து வருகிறார்.

 

இன்று மதியம் குருவிகளுக்கு தீனி போடுவதற்கு கூண்டில் பார்த்த பொழுது உள்ளே நல்ல பாம்பு ஒன்று படமெடுத்து கொண்டிருந்தது. அதனை கண்டு அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக அவர் மரக்காணம் தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தார். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர் பாம்பை மீட்டனர்.

 

பின்னர் உள்ளே இருந்த கூண்டுக்குள் இரண்டு பறவையும் இறந்து கிடந்தன. கூண்டுக்குள் புகுந்த பாம்பு குருவிகளை கொத்திக் கொன்றுள்ளது. இதை பார்த்த வீட்டின் உரிமையாளர் உள்ளிட்ட குடும்பத்தினர் கடும் வேதனை அடைந்தனர். பிடிக்கப்பட்ட நல்லபாம்பு வனப்பகுதியில் விடப்பட்டது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon