--- --:--:-- --

வளர்ப்பு நாய்க்கு சீமந்தம் செய்த குடும்பத்தினர்..!

3

சீர்காழியில் வளர்ப்பு நாய்க்கு சீமந்தம் செய்துவைத்த குடும்பத்தினரின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை சேர்ந்த நிதிஷ்குமார் சிவராஜ் ஆகிய சகோதரர்கள் தங்களது உறவினர் வீட்டில் இருந்து நாய்க்குட்டி ஒன்று தூக்கி வந்து பராமரித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் வீட்டில் அனைவரிடமும் பாசமுடன் பழகிய நாய் தற்பொழுது கருவுற்று உள்ளது. இதை அறிந்த வீட்டில் இருப்பவர்கள் அந்த நாய்க்கு சீமந்தம் செய்ய முடிவு செய்தனர். அதன்படி இந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் தங்கள் வீட்டிற்கு அனைவரையும் அழைத்து நாய்க்குட்டிக்கு சீமந்தம் செய்து மகிழ்ச்சி அடைந்தனர்.

 

இந்த நிகழ்ச்சியில் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு நாய்க்குட்டிக்கு சந்தனம் மஞ்சள் குங்குமம் இட்டு சீமந்தத்தை மகிழ்ச்சியுடன் கொண்டாடினர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon