ஆன்லைன் ரம்மியால் உயிரைவிட்ட சோகம்..!
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே ஆன்லைன் ரம்மியால் கடனாளியான ஒருவரின் பாதி எரிந்த நிலையில் ஆண் சடலம் கைப்பற்றப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.
கூட நகரம் பகுதியை சேர்ந்த அசோகா என்ற அந்த நபர் ஓசூரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து பிறகு வேலையை விட்டுவிட்டு சில நாட்களாக வீட்டில் இருந்து வந்துள்ளார். ஆன்லைன் ரம்மி விளையாட்டுக்கு அடிமையான அவர் அதற்காக ஊரைச்சுற்றி பலரிடம் கடன் வாங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இவரது செயல்பாடுகளால் வெறுத்துப்போன மனைவி அவரை பிரிந்து தாய் வீட்டிற்கு சென்று நிலையில் தனியாக வசித்து வந்துள்ளார். இந்த நிலையில் அவர் வீட்டிற்குப் பின்புறம் உள்ள காலி இடத்தில் பாதி எரிந்த நிலையில் அவரின் சடலம் கிடந்துள்ளது.
தகவல் அறிந்து வந்த போலீசார் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டாரா என விசாரித்து வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





