பள்ளி தலைமை ஆசிரியையை கண்டித்து மாணவர்கள் போராட்டம்..!
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு அரசு பள்ளி தலைமை ஆசிரியையை கண்டித்து மாணவ மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளியில் மின்கட்டணம் அதிகரிப்பதாக கூறி தலைமையாசிரியை மின்விசிறி இணைப்பை துண்டித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த மாணவர்கள் தலைமை ஆசிரியையை கண்டித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
புகாரின்பேரில் ஆய்வை மேற்கொண்ட திருத்தணி சந்திரன் பள்ளிக்கு புது மின் இணைப்பை ஏற்படுத்திக் கொடுத்த நிலையில் அதனை தலைமை ஆசிரியை மீண்டும் துண்டித்ததால் அவரை பணியிடை மாற்றம் செய்ய வலியுறுத்தி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





