--- --:--:-- --

லாரி மீது கார் மோதிய விபத்தில் கர்ப்பிணி பெண் பலி..!

4

திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு அருகே லாரி மீது கார் மோதிய விபத்தில் நிறைமாத கர்ப்பிணி பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முசிறி தொட்டியம் பகுதியை சேர்ந்த சதீஷ்குமார் சுகந்தி தம்பதியினர் அதே பகுதியில் காவலர்களாக பணியாற்றி வந்துள்ளனர்.

 

இந்த நிலையில் சுகந்தியின் தாயார் வீட்டிற்கு இருவரும் காரில் திண்டுக்கல் நோக்கி சென்று கொண்டிருந்தனர். அப்போது வத்தலகுண்டு பைபாஸ் சாலை அருகே குட்டியபட்டி என்ற இடத்தில் சென்றபோது சாலையோரம் நின்றிருந்த லாரி மீது கார் பயங்கரமாக மோதியது.

 

இதில் காரில் பயணம் செய்த நிறைமாத கர்ப்பிணியான சுகந்தி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் கணவர் சதீஷ் படுகாயமடைந்த நிலையில் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் அவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 

இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon