--- --:--:-- --

பிரதமருக்கு விநாயகர் சிலையை பரிசாக வழங்கிய தமிழிசை..!

1

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசியுள்ளார். புதுச்சேரி மாநில வளர்ச்சிக்காக தொலைநோக்கு திட்டங்கள் குறித்த அறிக்கையை ஒப்படைத்தது குறித்து ஆலோசனை மேற்கொண்டதாக துணைநிலை ஆளுநர் செயலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

புதுச்சேரி மாநில வளர்ச்சி மற்றும் நலத் திட்டங்களுக்கு மத்திய அரசு அனைத்து ஒத்துழைப்பையும் நல்கும் என பிரதமர் உறுதி அளித்து இருப்பதாகவும் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. சந்திப்பின் பொழுது பிரதமருக்கு விநாயகர் சிலை ஒன்றை தமிழிசை சௌந்தரராஜன் பரிசாக வழங்கியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon