அரசு மருத்துவமனை பெண் தூய்மை பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை..!
செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணிபுரியும் தூய்மை பெண் பணியாளர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக தனியார் ஒப்பந்த நிறுவன மேலாளரை போலீசார் கைது செய்தனர். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தனியார் நிறுவனத்தின் கீழ் சுமார் 290 பேர்கள் தூய்மைப் பணியாளர்கள் சுழற்சி முறையில் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் அங்கு பணிபுரியும் பெண் ஒருவருக்கு அந்த நிறுவனத்தின் மேலாளர் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இதுகுறித்து நிலைய மருத்துவ அதிகாரி களிடம் அந்த பெண் புகார் அளித்துள்ள நிலையில் அதனை வாபஸ் பெறச் சொல்லி மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் போலீசார் பெண் வன்கொடுமை சட்டத்தின் கீழ் அவரை கைது செய்தனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





