--- --:--:-- --

கல்லூரி வாகனம் மீது கார் மோதிய காட்சி..!

3

கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் பகுதியில் கல்லூரி வாகனம் மீது கார் மோதி விபத்துக்குள்ளான பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சி வெளியாகியுள்ளது.

 

கன்னியாகுமரி மாவட்டம் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் தனியார் கல்லூரி வாகனமொன்று மாணவ மாணவிகளை ஏற்றிக் கொண்டு சென்றது. அப்போது எதிரே வந்த கார் ஒன்று எதிர்பாராதவிதமாக கல்லூரி வாகனம் மீது மோதி விபத்துக்குள்ளானது.

 

இந்த விபத்தில் இரண்டு வாகனங்களில் முன்பக்கம் பலத்த சேதமடைந்தது. இருப்பினும் நல்வாய்ப்பாக இந்த விபத்தில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon