--- --:--:-- --

மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய மலைப்பாம்பு..!

5

மீனுக்கு விரித்த வலையில் சிக்கிய 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை தீயணைப்புத்துறையினர் லாவகமாக பிடித்துள்ளனர். ஸ்டீபன் ராஜ் என்பவர் மீன் பிடிப்பதற்காக விரித்த வலையில் மலைப்பாம்பு சிக்கியுள்ளதாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

 

இதையடுத்து அந்த பகுதிக்கு சென்ற தீயணைப்பு படையினர் ஒருமணி நேர போராட்டத்திற்கு பிறகு 10 அடி நீளமுள்ள மலைப்பாம்பை லாவகமாக பிடித்தனர். பிடிக்கப்பட்டுள்ள இந்த மலைப்பாம்பு பச்சை மலை காட்டில் விடப்பட்ட உள்ளதாக தீயணைப்பு துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon