தனியார் உணவகத்தில் செல்போனை திருடிச் சென்ற ஸ்விக்கி ஊழியர்..!
திருப்பூரில் தனியார் உணவகத்தில் சுவிகி ஊழியர் ஒருவர் செல்போனை திருடிச் செல்லும் சிசிடிவி கேமரா பதிவுகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
கேபிஎன் காலனி பகுதியில் உள்ள தனியார் வாடிக்கையாளர் கொடுத்த ஆர்டரின் பேரில் உணவு பெற்றுச் செல்ல வந்த ஊழியர் ஒருவர் அங்கிருந்த செல்போனை யாருக்கும் தெரியாமல் எடுத்துச் செல்லும் சிசிடிவிகாட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
செல்போன் திருட்டு தொடர்பான புகார்கள் அடங்காத நிலையில் பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என சமூக வலைதளங்களில் இந்த வீடியோ காட்சிகள் பரப்பப்பட்டு வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





