வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர் பள்ளத்தில் விழுந்து உயிரிழந்தார்..!
திண்டுக்கல் மாவட்டம் நத்தம் அருகே இருசக்கர வாகனத்தில் அதிவேகமாக சென்ற இளைஞர் சாலையோர பள்ளத்தில் விழுந்து பரிதாபமாக உயிரிழந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
பொன்னுசாமி என்பவரது 22 வயது மகன் அர்ஜுனன். நேற்று இரவு நண்பர்களை சந்தித்து விட்டு வீடு திரும்பிக் கொண்டிருந்தார். அப்பொழுது நத்தம் சாலையில் மேல் தடுமாறி சாலையோரத்தில் உள்ள பள்ளத்தில் தூக்கி வீசப்பட்டு உயிரிழந்தார்.
இதனை பின்னால் வந்த மற்றொரு வாகன ஓட்டி பார்த்து விட்டு கடந்து செல்லும் சிசிடிவி காட்சிகள் பதிவாகியுள்ளது. தகவல் அறிந்து வந்த போலீசார் அர்ஜுனனின் உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்ததோடு விரிவாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





