--- --:--:-- --

சீக்கிய மாணவியின் தலைப்பாகையை அகற்றக் கூறிய கர்நாடகக் கல்லூரி..!

8

ர்நாடகாவில் ஹிஜாப் சர்ச்சையை தொடர்ந்து சீக்கிய மாணவி தலைப்பாகையை அகற்ற கல்லூரி நிர்வாகம் வலியுறுத்தியுள்ள நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலத்தில் இஸ்லாமிய மாணவிகள் ஹிஜாப் அணிய கூடாது என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.

 

இதையொட்டி கர்நாடக அரசு மதரீதியான உடைகளை அணிந்து பல்கலைகழகங்களுக்கு மாணவர்கள் வர தடை விதித்தது. இதை எதிர்த்து மாநிலம் முழுவதும் மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

 

உச்சநீதிமன்றம் இதுகுறித்து முடிவுக்கு வரும்வரை மத ரீதியான உடைகளை மாணவர்கள் கல்வி நிலையத்திற்கு அணிந்து செல்லக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பெங்களூருவில் உள்ள ஒரு கல்லூரியில் பயிலும் சீக்கிய மாணவி தலைப்பாகையை அகற்ற வேண்டும் என்று நிர்வாகம் வலியுறுத்தியுள்ளது.

 

இது தற்போது மேலும் ஒரு சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் இந்த வழக்கை கர்நாடக உயர் நீதிமன்றம் கவனத்தில் கொண்டு செல்ல உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon