--- --:--:-- --

2 வயது குழந்தை கழிவு நீர் குழியில் விழுந்து உயிரிழப்பு.!

6

சங்கரன்கோயிலில் கழிவுநீர் தேங்குவதால் வெட்டப்பட்டிருந்த கழிவுநீர் குழாயில் 2 வயது குழந்தை விழுந்து உயிரிழந்தது. பாரதியார் நகரை சேர்ந்தவர் சங்கர் துர்கா தேவி தம்பதியின் 2 வயது குழந்தை மாலை வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த பொழுது எதிர் வீட்டில் கழிவுநீர் தேங்க வெட்டப்பட்டிருந்த 4 அடி ஆழ குழியில் தவறி விழுந்துள்ளார்.

 

வெகு நேரம் கழித்து துர்காதேவி குழந்தையை தேடி சென்றபோது குழந்தை உள் விழுந்து இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

 

அந்த பகுதியில் கால்வாய் மற்றும் கழிவுநீர் தொட்டி வசதியில்லாததால் ஒவ்வொருவரும் தங்களது வீட்டின் அருகே கழிவுநீர் தொட்டி வெட்டியுள்ளனர். குழியில் விழுந்த குழந்தை உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon