கலைஞர் மு.கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது..!
செம்மொழி தமிழாய்வு நிறுவனம் அமைந்துள்ள மேடவாக்கம் சோழிங்கநல்லூர் சாலை, இனி செம்மொழித் சாலை என அழைக்கப்படும் என்று முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
2010 முதல் 2019 ஆம் ஆண்டு வரை கலைஞர் மு.கருணாநிதி செம்மொழி தமிழ் விருதுக்காக தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு க ஸ்டாலின் கலந்து கொண்டு 10 பேருக்கு விருதுகளை வழங்கினார்.
முனைவர் வி எஸ் ராஜம், பேராசிரியர் கோதண்டராமன், பேராசிரியர் சுந்தரமூர்த்தி, பேராசிரியர் மருதநாயகம், பேராசிரியர் மோகனராசு, பேராசிரியர் மறைமலை, பேராசிரியர் ராஜன் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது.






