--- --:--:-- --

தனுஷ் – ஐஸ்வர்யா வீடியோவை பகிர்ந்து இணையவாசிகள் வருத்தம்..!

9

நடிகர் தனுஷும் ஐஸ்வர்யாவும் விவாகரத்து செய்யப் போவதாக அறிவித்திருக்கும் நிலையில் கடந்தாண்டு ஐஸ்வர்யாவின் பிறந்த நாளில் தனுஷ் பாட்டு பாடி வாழ்த்து கூறிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

 

கடந்த 2004ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்ட தனுஷ் ஐஸ்வர்யா தம்பதிக்கு 2 மகன்கள் உள்ளனர். இந் நிலையில் 18 ஆண்டுகால திருமண பந்தம் முடிவுக்கு வருவதாக தனுஷும் ஐஸ்வர்யாவும் நேற்று அறிவித்திருந்தனர்.

 

விவாகரத்துக்கான காரணம் இன்னும் தெரியவராத நிலையில் கடந்த ஆண்டு ஐஸ்வர்யாவின் பிறந்த நாளில் ரஜினி படத்தில் வரும் இளமை திரும்புதே பாடலை பாடி தனுஷ் வாழ்த்து கூறிய வீடியோ வெளியாகியுள்ளது. இந்த வீடியோவை பகிர்ந்து வரும் இணைய வாசிகள் தங்களது வருத்தங்களை தெரிவித்து வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon