--- --:--:-- --

தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கு..! மேலும் கட்டுப்பாடுகள்..!

1

தமிழகத்தில் அனைத்து கடற்கரைகளிலும் நடைப்பயிற்சி மேற்கொள்ள 50 சதவீதம் பேருக்கு மட்டுமே மக்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. பொதுப் பேருந்துகள் மற்றும் புறநகர் ரயில்களில் உள்ள இருக்கைகளில் 50 சதவீத பயணிகளுக்கு மட்டும் அனுமதி. ஓட்டல்கள், தங்கும் விடுதியில் 50 சதவீத நபர்களுக்கு மட்டுமே அனுமதிக்கப்பட்டுள்ளது.

 

பொதுப் போக்குவரத்துக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. பொதுப் பேருந்துகள் ரயில்கள் உள்ள இருக்கைகளில் 50 சதவீத பயணிகள் மட்டுமே அமர்ந்து பயணிக்க அனுமதிக்கப்படும். கேளிக்கைகள், உடற்பயிற்சிக் கூடங்களில் 50 சதவீதம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

 

பொருட்காட்சி புத்தகக் கண்காட்சிகள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. மீன் சந்தைகள் ஒரே இடத்தில் செயல்படவும் காய்கறி சந்தைகளில் வார இறுதி நாட்களில் ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் அமைக்க தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.

 

பியூட்டி பார்லர்களில் ஒரே நேரத்தில் 50 சதவீத வாடிக்கையாளர்களுக்கு மட்டுமே அனுமதி. தியேட்டர்களுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கும் 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். தமிழகத்தில் இரவு நேர ஊரடங்கும் அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon