சென்னையில் கடற்கரைகளுக்கு இன்று முதல் மக்கள் செல்ல தடை..!
ஓமைக்ரான் அச்சுறுத்தல் காரணமாக சென்னையில் உள்ள கடற்கரைகளுக்கு இன்று முதல் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது. தொற்று அதிகரிப்பதை கருத்தில் கொண்டு மறு உத்தரவு வரும் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
நடைபயிற்சி செல்லும் பொதுமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் செல்ல மட்டும் பிரத்யேக பாதையில் செல்ல மாநகராட்சி அனுமதி அளித்துள்ளது. மேலும் கடற்கரை சாலையை மக்கள் பயன்படுத்துவதற்கு தடை இல்லை என குறிப்பிட்டுள்ளது. கடற்கரையில் மணல் பரப்பில் செல்வதற்கு மட்டும் தடை விதிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





