--- --:--:-- --

டி‌என்‌பி‌எஸ்‌சி குரூப் 1 முதன்மைத் தேர்வுத் தேதி அறிவிப்பு..!

4

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் குரூப் 1 முதன்மை தேர்வு தேதி அடுத்தாண்டு மார்ச் மாதம் 4, 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

அறுபத்தி ஆறு பணியிடங்களுக்கு நடைபெற்ற முதல்நிலைத் தேர்வில் 3 ஆயிரத்து 800 பேர் தேர்ச்சி பெற்றதாக தேர்வு ஆணையம் கூறியுள்ளது. மார்ச் மாதம் நடைபெறும் முதன்மை தேர்வில் இந்த 3 ஆயிரத்து 800 பேர் எழுத உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

உதவி ஆட்சியர், துணை காவல் துறை கண்காணிப்பாளர், வணிகவரித் துறை உதவி ஆணையர் உட்பட ஆறு துறைகளில் உள்ள 66 பணியிடங்களை நிரப்ப இந்த தேர்வு நடைபெறுகிறது.

 

முதல்நிலை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் வருகிற 22ஆம் தேதி முதல் ஜனவரி 5ஆம் தேதிக்குள் சான்றிதழை இணையத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon