கேப்டன் வருண் சிங் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம்..!
குன்னூர் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி உயிர்தப்பிய ராணுவ அதிகாரி வருண் சிங்கின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளது என விமான படை தெரிவித்துள்ளது. ஹெலிகாப்டர் விபத்தில் விமானப்படை கேப்டன் வருண் சிங் தீ காயங்களுடன் உயிர் தப்பினார்.
தற்போது பெங்களூரு ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வருண் சிங்கின் உடல்நிலை சீராக உள்ள போதும் அவர் தொடர்ந்து கவலைக்கிடமாக இருப்பதாக விமானப்படை அறிவித்துள்ளது. உயிர்காக்கும் உபகரணங்கள் மூலம் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





