சிக்கன் பிரியாணியில் புழு இருந்ததாக கூறி வாக்குவாதம்..!
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி அருகே ஹோட்டலில் சாப்பிட சிக்கன் பிரியாணியில் புழு இருந்ததாக கூறப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சூளகிரி அடுத்த பகுதியில் ஸ்டார் பிரியாணி இயங்கி வருகிறது.
மூர்த்தி, அருண், ராமச்சந்திரன் ஆகியோர் சிக்கன் பிரியாணியை சாப்பிட்டுள்ளனர். அப்பொழுது அந்த பிரியாணியில் புழு இருந்ததாக நிர்வாகத்தினரிடம் காட்டி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இது குறித்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவியது.
இது தொடர்பாக பேசிய உணவு துறை மேலாளர் தங்கள் உணவகத்தில் சமைக்கப்படும் உணவுகள் அனைத்தும் விறகடுப்பில் தான் சமைக்கப்படுகிறது எனவும், ஆனால் அவர்கள் காட்டிய பிரியாணியில் அந்த புழு உயிருடன் இருப்பதாகவும் குறிப்பிட்டார்.
மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் பிரியாணியை பார்சல் வாங்கிக்கொண்டு ஹோட்டலுக்கு வெளியே சென்று சாப்பிட்டு விட்டு 20 நிமிடம் கழித்து ஹோட்டலுக்கு வந்து பிரியாணியில் புழு இருந்ததாக கூறியதாகவும் மேலும் இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருப்பதற்காக தங்களிடம் பணம் கேட்டதாகவும் தெரிவித்தார்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X





