ஊத்துக்குளி கொங்கு பள்ளி மாணவ மாணவிகள் பிபின் ராவத்துக்கு மலர் தூவி அஞ்சலி
நீலகிரி மாவட்டம் குன்னூர், காட்டேரி பார்க் நஞ்சப்பா சத்திரம் பகுதியில் இந்திய நாட்டின் முப்படைகளின் தலைமை தளபதி பிபின் ராவத், அவரது மனைவி மதுலிகா மற்றும் ராணுவ வீரர்கள் சென்ற ராணுவ ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கி தீப்பிடித்து மலைப்பகுதியில் விழுந்தது. இதில் பயணம் செய்த 14 பேரில் 13 ராணுவ உயரதிகாரிகள் உயிரிழந்தனர். விபத்தில் உயிரிழந்த முப்படைத் தளபதி பிபின் ராவத் மற்றும் ராணுவ உயர் அதிகாரிகளுக்கு நாடு முழுவதும் பொதுமக்கள் மலர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
இதனையடுத்து திருப்பூர் அடுத்துள்ள ஊத்துக்குளி, பவர் ஹவுஸ் பின்புறம் செயல்பட்டு வரும் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் நேற்று பிபின் ராவத் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.
நிகழ்ச்சிக்கு பள்ளி முதல்வர் கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார். பள்ளியின் தலைவர் ஏ.கே.சி தியாகராஜன், செயலாளர் செந்தில்நாதன், தாளாளர் பாலசுப்பிரமணியம், பொருளாளர் சந்திரசேகர், நிர்வாக குழு உறுப்பினர்கள், ஆசிரிய,ஆசிரியைகள் மற்றும் 1 வது வகுப்பு முதல் பிளஸ் 2 வரை படிக்கும் 1000க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் திரளாக கலந்துகொண்டு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்
📱 Share on WhatsApp 𝕏 Share on X




