--- --:--:-- --

கதவு மூடியதில் வீட்டுக்குள் சிக்கிய 2 மாத குழந்தை மீட்பு..!

1

கன்னியாகுமரி மாவட்டம் அழகிய மண்டபம் பகுதியில் வீட்டிற்குள் சிக்கிய இரண்டரை மாத குழந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டனர். விலாந்து தோப்பு பகுதியைச் சேர்ந்த நிதின் பணிக்கு செல்ல கிளம்பிய போது அவரது மனைவி இரண்டரை மாத பெண் குழந்தையை வீட்டிற்குள் வைத்து விட்டு கணவரை வழியனுப்ப வெளியே வந்துள்ளார்.

 

அப்போது காற்று வீசியதில் கதவு தானாகவே மூடிக் கொண்டது. இதையடுத்து கதவின் பூட்டை உடைத்து குழந்தையை தீயணைப்பு துறையினர் மீட்டனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon