--- --:--:-- --

இறுக்கமாக சட்டை அணிந்ததற்காக மாணவரை தாக்கிய ஆசிரியர்..!

6.1

இறுக்கமாக சட்டை அணிந்ததற்காக பதினோராம் வகுப்பு மாணவனை தனியார் பள்ளி ஆசிரியர் தாக்கி காயப்படுத்தியதாக எழுந்த புகார் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கணபதி பகுதியை சேர்ந்த கண்ணன் என்பவரின் மகன் அதே பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 11-ம் வகுப்பு பயின்று வருகிறார்.

 

வகுப்புகள் நடைபெற்று வரும் நிலையில் மாணவருக்கு சீருடை, புத்தகங்கள் கூறப்படுகிறது. அதனால் சட்டையை சரி செய்து பள்ளிக்கு அணிந்து சென்றார். அப்பொழுது வகுப்பறையிலிருந்த இயற்பியல் ஆசிரியர் சட்டை ஏன் இறுக்கமாக உள்ளது என்ற மாணவரை சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது.

 

இதனால் அவருக்கு காயம் ஏற்பட்டது. மாணவரை அளித்த தகவலின் பேரில் பள்ளிக்கு சென்ற மாணவரின் தந்தை அவரை கோவை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்து சென்றனர். அதை தொடர்ந்து புகார் அளித்ததன் பேரில் சரவணம்பட்டி காவல்துறை அதிகாரிகள் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon