கல்லூரியில் 12 பேருக்கு கொரோனா..! மருத்துவமனையில் அனுமதி..!
முகப்பேரில் உள்ள தனியார் கல்லூரியில் 12 பேருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. முகப்பேறு பகுதியில் செயல்பட்டு வரும் செவிலியர் கல்லூரி மாணவர்கள் 3 பேருக்கு கொரொனா தொற்று ஏற்பட்டது.
இதையடுத்து அவர்களுடன் தொடர்பிலிருந்த 210 பேருக்கு பரிசோதனை செய்ததில் மேலும் 9 மாணவிகளுக்கு கொரொனா பாதிப்பு இருப்பது தெரியவந்தது. பாதிக்கப்பட்ட மாணவிகள் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




