தாயும், மகளும் வீட்டில் சடலமாக கண்டெடுப்பு..!
விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் அருகே 80 வயதான தாய் மற்றும் 60 வயதான மகள் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் நகை, பணத்திற்காக கொலை நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தக்ஷிணாமூர்த்தி என்பவரது மனைவி, மற்றும் அவரது மகள் மூதாட்டிகளான இருவரும் அந்த பகுதியில் உள்ள தங்களுக்கு சொந்தமான வீட்டில் வழக்கம் போல் நேற்று இரவு உறங்கிக் கொண்டிருந்தனர்.
இதையடுத்து இன்று விடியற்காலை இவர்கள் இருவரும் மர்மமான முறையில் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்து உள்ளனர். இவர்கள் இருவரும் உருட்டுக் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது.
நகை மற்றும் பணத்திற்காக இவர்கள் இருவரும் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. எனவே இது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




