எல்லையில் குழந்தை பிறந்துள்ளதால் பார்டர் எனப் பெயர்சூட்டல்..!
அட்டாரி எல்லையில் பாகிஸ்தான் அதிகாரிகளால் அனுமதி மறுக்கப்பட்ட பெண்ணுக்கு பிறந்த குழந்தைக்கு பார்டர் என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் ரஞ்சித்போர் மாவட்டத்தை சேர்ந்த தம்பதி உட்பட 98 பேர் இந்தியாவில் உள்ள புனித தலங்களுக்கு சென்று வழிபடுவதற்காகவும், தங்கள் உறவினர்களை சந்திப்பதற்கும் ஊரடங்கு நடைமுறைக்கு முன்பு இந்தியா வந்தனர்.
புனித தலங்களுக்கு சென்று விட்டு பாகிஸ்தானில் உள்ள தங்கள் சொந்த ஊருக்கு செல்ல முடிவு செய்து திரும்பினர். ஆனால் இந்தியா பாகிஸ்தான் எல்லையில் போதுமான ஆவணங்கள் இல்லை எனக்கூறி பாகிஸ்தான் அதிகாரிகள் அனுமதிக்க மறுத்துவிட்டனர். இதனால் எல்லை அருகே உள்ள கூடாரங்களில் தங்கி உள்ளனர்.
அவர்களுக்கான மூன்று வேளை உணவு, உடை உள்ளிட்டவற்றை அந்த பகுதியில் உள்ள கிராமத்தினர் கொடுத்து உதவியுள்ளனர். இந்த நிலையில் பெண் கர்ப்பமானார். கடந்த மாதம் இரண்டாம் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது.
இதையடுத்து அந்தாரி எல்லை பகுதியை சேர்ந்த கிராமத்தினர் அவருக்கு மருத்துவ வசதிகளை ஏற்பாடு செய்தனர். அவர்களுக்கு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தை எல்லையில் பிறந்ததால் பார்டர் என பெயர் சூட்டியுள்ளனர்.






