வரும் 29ஆம் தேதி தொடங்கும் நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடர்..!
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் வரும் 29ஆம் தேதி தொடங்கி டிசம்பர் மாதம் 23 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. விதிமுறைகளை பின்பற்றி கடந்த ஒன்றரை ஆண்டுகளாக நடைபெற்று வரும் கூட்டத்தொடரில் குளிர்காலக் கூட்டத் தொடரும் நடைபெற உள்ளது.
கொரொனா நோய் காரணமாக கடந்த ஆண்டு குளிர்கால கூட்டத்தொடர் நடைபெறாத நிலையில் தற்போது 20 நாட்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் 29-ஆம் தேதி முதல் டிசம்பர் 23ஆம் தேதி வரை கூட்டத்தொடர் நடைபெற உள்ளது.
உத்திரபிரதேசம் உள்ளிட்ட 5 மணிமாநில சட்டப்பேரவை தேர்தல் நெருங்கும் நிலையில் இந்த கூட்டத்தொடர் கூட உள்ளதால் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்த முடிவுகள் எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேநேரம் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, சமையல் எண்ணெய் விலை அதிகரிப்பு, காஷ்மீர் பொதுமக்களை குறிவைத்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல், உத்திரபிரதேசத்தில் விவசாயிகள் மீது காரை ஏற்றி கொலை செய்தது, மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிரான விவசாயிகளின் போராட்டம் உள்ளிட்ட விவகாரங்கள் இந்த கூட்டத்தொடரில் வலுவாக எதிரொலிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.






