--- --:--:-- --

தடுப்பூசி போட வந்தவரை தாக்க முயன்ற பெண்..!

13

தடுப்பூசியை செலுத்த சென்ற மருத்துவப் பணியாளரை கிராமப் பெண் ஒருவர் மண்வெட்டியால் தாக்கவரும் சம்பவம் கர்நாடகாவில் அரங்கேறியுள்ளது. தடுப்பூசி செலுத்துவதில் தீவிரம் காட்டி வரும் கர்நாடக அரசு மக்களை தேடிச்சென்று தடுப்பூசி செலுத்தி வருகிறது.

 

அந்த வகையில் சித்ரதுர்கா மாவட்டத்தில் உள்ள கிராமத்திற்கு தடுப்பூசி செலுத்த சென்ற மருத்துவ பணியாளர்களுக்கு அதிர்ச்சி காத்திருந்தது. தடுப்பூசி உடன் சென்றவர்களை பார்த்த பெண் ஒருவர் களை எடுத்துக் கொண்டிருந்த மண்வெட்டியால் தாக்க வந்தார்.

 

தடுப்பூசியின் அவசியத்தை மருத்துவ ஊழியர்கள் எடுத்துரைத்தும் காதில் வாங்கிக் கொள்ளாத பெண்கள் அவர்களை விரட்டுவதிலே குறியாக இருந்துள்ளனர். இதேபோல மற்றொரு இடத்தில் இருந்த பெண் ஒருவர் தடுப்பூசியுடன் மருத்துவ ஊழியர்களை பார்த்ததும் எழுந்து ஓட்டம் பிடித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon