--- --:--:-- --

வாயு, அஜீரண மாத்திரைகளால் அபாயகரமான பின்விளைவுகள் ஏற்படும்..!

2

நெஞ்செரிச்சல், அஜீரணம், வாயுத்தொல்லை போன்றவற்றுக்காக எடுத்துக்கொள்ளப்படும் மருந்துகளும் சிறுநீரக பாதிப்புகளை ஏற்படுத்தும் என்ற அறிவிப்பை அந்த மருந்துகளின் பாக்கெட்டுகளில் அச்சிட வேண்டும் என மருந்து கட்டுப்பாட்டாளர் உத்தரவிட்டுள்ளார்.

 

இந்த மருந்துகளை நீண்ட நாள் எடுத்துக் கொண்டால் மிகவும் அபாயகரமான பின் விளைவுகள் ஏற்படும் என அண்மையில் சர்வதேச அளவில் நடத்தப்பட்ட ஆய்வுகளில் தெரியவந்துள்ளது.

 

இந்த மருந்துகளை நீண்ட காலம் பயன்படுத்தினால் சிறுநீரகப் பாதிப்பு, தீவிர சிறுநீரக நோய் ஏற்படுவதுடன் சிலருக்கு வயிற்றில் புற்றுநோய் ஏற்படவும் வாய்ப்புள்ளது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon