பிரசவம் நடந்து கொண்டிருந்த போது திடீரென மேற்கூரை விழுந்ததால் பரபரப்பு..!
கடலூர் மாவட்டத்தில் ஆரம்ப சுகாதார நிலையத்தில் பெண்ணுக்கு பிரசவம் நடந்து கொண்டிருந்தபொழுது மேற்கூரை இடிந்து விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவம் நடைபெற்றது.
அப்போது பிரசவ அறையில் மேற்கூரையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. பிரசவம் பார்த்துக் கொண்டிருந்த போது மருத்துவ பணியாளர் மற்றும் உறவினர் என இருவர் காயமடைந்த நிலையில் ரேவதிக்கு பிரசவம் முடிந்து அழகான ஆண் குழந்தை பிறந்தது. தொடர் கனமழையால் மேற்கூரை இடிந்து விழுந்ததாக கூறப்படுகிறது.






