--- --:--:-- --

குற்றவாளிக்கு மரணம் வரை ஆயுள் தண்டனை..!

8

புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 12 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த இளைஞருக்கு மரணம் வரை ஆயுள் தண்டனை விதித்து மகிளா நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது. விராலிமலையை சேர்ந்த 12 வயது சிறுமி கடந்த ஜூன் மாதம் வீட்டில் தனியாக இருந்த போது மாதவன் என்பவர் பாலியல் தொந்தரவு கொடுத்தார்.

 

சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். பிடித்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டவர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

 

விசாரணையில் இறக்கும்வரை மாதவனை சிறையில் அடைக்கவும் 50,000 ரூபாய் அபராதமும் விதித்து மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிறுமி மீது தாக்குதல் நடத்துவதற்காக 10 ஆண்டுகள் சிறையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து நீதிபதி சத்திய ஆணையிட்டுள்ளார்.

 

மேலும் பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு 4 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கவும் அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon