ரசிகர் உயிரிழப்பு வேதனையடையச் செய்கிறது: திரிஷா
தனது ரசிகர் கிஷோர் என்பவர் உயிரிழந்த செய்தி கேட்டு தான் மிகவும் வேதனை அடைந்ததாகவும் நடிகை திரிஷா டுவிட்டரில் இரங்கல் செய்தியை பதிவிட்டுள்ளார். த்ரிஷா ரசிகர் கொரொனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்துவிட்டதாக நடிகை த்ரிஷாவிற்கு தகவல் கிடைத்தது.
இதனால் மனமுடைந்த அவர் ரசிகர் உயிரிழந்தது குறித்து பெரும் வேதனை அடைந்து பதிவிட்டுள்ளார். ரசிகர்களுக்கு மிகவும் வேதனை ஏற்படுத்தி விட்டதாகவும் அவரின் மரண செய்தியால் தன்னுடைய இதயம் உடைந்து விட்டதாகவும் அவரை தனது சகோதரன் என குறிப்பிட்டு இரங்கல் தெரிவித்து இருந்தார்.
இப்படி ஒரு ரசிகர் கிடைத்ததற்கு நன்றி என குறிப்பிட்டுள்ளார். திரிஷா ரசிகர்கள் பலரும் கிஷோர் தொடர்ந்து தங்களுக்கு ஆதரவளித்து வந்ததாகவும் தங்களிடம் திரிஷா பற்றி பேசுவதற்காக அவர் நேரம் ஒதுக்குவதாகவும் அவர் நேர்மையான மனிதர் எனவும் பாராட்டியுள்ளனர்.






