--- --:--:-- --

கிழிந்த ரூபாய் நோட்டுகளை இங்கு மாற்றலாம்..!

8

கிழிந்த ரூபாய் நோட்டுகளை எந்த வங்கிகளிலும் மாற்றலாம் என்று ரிசர்வ் வங்கியின் அறிவிப்பால் பொதுமக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

 

இதுகுறித்து ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள அறிக்கையில் கிழிந்த மற்றும் மாற்றவே முடியாத ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய ரூபாய் நோட்டுகளை பெற அந்தந்த மாநிலங்களின் தலைநகரங்களில் உள்ள ரிசர்வ் வங்கிக்கு செல்ல வேண்டிய நிலை இருந்தது.

 

இதனால் கிராமப்புற மக்கள் ரூபாய் நோட்டுகளை மாற்ற முடியாத நிலையில் இருந்தனர். இந்த நிலையில் நாடு முழுவதும் பல கோடி ரூபாய் வீணாகி வருவதாக தெரிவிக்கப்பட்டது.

 

இதனையடுத்து கடந்த ஏப்ரல் மாதம் பொதுமக்கள் கிழிந்த மாற்றமுடியாத ரூபாய் நோட்டுகளை மாற்ற வசதியாக தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் அவற்றின் கிளைகள், தனியார் வங்கிகள் கூட்டுறவு வங்கிகளில் மாற்றிக் கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டது.

 

ஆனால் கொரொனா பரவலால் வழிகாட்டுதலை பின்பற்ற முடியாமல் போனது.தற்போது கிழிந்த ரூபாய் நோட்டுகளை மாற்றிக்கொள்ளலாம் எனவும், இதுதொடர்பாக அனைத்து வங்கிகளுக்கும் அறிக்கை அனுப்பி வைக்கப்பட்டு உத்தரவிடப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon