--- --:--:-- --

சூர்யா படத்தை திரையிட்டால் தியேட்டர்களை கொளுத்துவோம் என மிரட்டல்..!

9

நடிகர் சூர்யா நடிப்பில் வெளியான படம் ஜெய்பீம். நீதி நாயகம் சந்துரு அவர்கள் வழக்கறிஞராக இருந்த போது நடத்திய ஒரு வழக்கில் அதிகாரத்தை எதிர்த்து சட்டப் போராட்டம் மூலம் நீதி எவ்வாறு நிலைநாட்டப்பட்டது என்பதே படத்தின் மையக்கரு.

 

இதில் பழங்குடியின மக்கள் குறித்தும் அவர்களின் பிரச்சினைகள் குறித்தும் பேசப்பட்டுள்ளது. இந்த படத்தில் வரும் காவல்துறை கதாபாத்திரமான குரு என்பவரின் கதாபாத்திரம் வன்னியர் சமூகத்தை குறிப்பதாகும். இந்த சூழலில் மறைந்த காடுவெட்டி குருவின் மருமகன் மனோஜ் தமிழகத்தில் சூர்யா எங்கும் நடமாட முடியாது என்று எச்சரிக்கை விடுத்துள்ளார்.

 

இதுகுறித்து ஊடகம் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர் உண்மை கதை என்று சொல்லிவிட்டு வில்லனை வன்னியர் சமூகத்தை சேர்ந்தவர் போல் காட்டியுள்ளனர். இருளர் சமுதாயம் எவ்வளவு பாதிக்கப்பட்டுள்ளது என்பதை காட்டும் திரைப்படம் என்று சூர்யா கூறுகிறார். ராஜகண்ணு என்ற பழங்குடியினரை கொலை செய்த காவல் ஆய்வாளர் பெயர் அந்தோணிசாமி.

 

ஆனால் அந்த கதாபாத்திரத்தில் குருமூர்த்தி என்று பெயர் வைத்து வன்னியர் சங்க தலைவர் குருவை நினைவுபடுத்தும் வகையில் குரு என்று அழைத்து தமிழ்நாட்டில் வாழும் வன்னியர் மக்களை கொந்தளிக்க செய்துள்ளார்.

 

வில்லனாக காட்டியுள்ள போலீசார் வீட்டிற்குள் வன்னியர் சங்க கேலண்டரை தொங்கவிட்டது ஏன், குரு என்று பெயர் வைத்ததற்கு பதிலாக தீரன் சின்னமலை என்றும் பெயர் வைப்பாரா சூர்யா எனவும், ஒட்டுமொத்த வன்னிய சமுதாய மக்களிடம் சூர்யா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் சூர்யாவின் எந்தப் படமும் இதே தியேட்டர்களில் ஓட்ட முடியாது என்றும், மீறி படத்தை திரையிட்டால் தியேட்டரை கொளுத்துவோம் எனவும் மிரட்டல் விடுத்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon