--- --:--:-- --

மின்சாரம் பாய்ந்து பரிதாபமாக உயிரிழந்த 11வயது சிறுமி..!

3

சென்னை திருவெற்றியூரில் மின்சாரம் பாய்ந்து 11 வயது சிறுமி உயிரிழந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. திருவொற்றியூர் கலைஞர் நகர் மேற்கு தெருவில் வசித்து வரும் சிட்டிபாபு பலத்த மழை காரணமாக நேற்று மாலை தனது இரண்டு மகள்களை சகோதரி வீட்டிற்கு அனுப்பியுள்ளார்.

 

சிறுமிகள் இருவரும் கொட்டும் மழையில் புறப்பட்டு சென்ற பொழுது சாலையில் உள்ள மின் கம்பத்தில் மின்சாரம் தண்ணீரில் திடீரென பாய்ந்ததால் 11 வயது சிறுமி கமலி திடீரென தூக்கி வீசப்பட்டார்.

 

இதில் மயக்கமான அந்த சிறுமி மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X
Right Menu Icon